நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ணம்: பெனால்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது எகிப்து

அட்லாண்டா:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் பெனால்டியில்  வீழ்த்திய எகிப்து அணி, சாதனை வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றான, சுற்று-16க்கு முன்னேறியுள்ளது.

பிபா உலகக் கிண்ண சுற்று 32 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - எகிப்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்திலேயே எகிப்து வீரர் எமாம் ஆஷூர் அபாரமாக தலையால் முட்டி ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

பதிலடி கொடுக்க முயன்ற ஆஸ்திரேலியாவுக்கு, 55ஆவது நிமிடத்தில் அதிர்ஷ்டம் அடித்தது.

ஆஸ்திரேலிய வீரர் எய்டன் ஓ நீல் அடித்த பந்தை தடுக்க முயன்ற எகிப்து வீரர் முகமது ஹானி, எதிர்பாராதவிதமாக பந்தை தனது சொந்த கோல் போஸ்ட்டிற்குள்ளேயே அடித்து கோல் ஆக்கினார்.

இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. 90 நிமிட ஆட்ட நேர முடிவிலும், கூடுதல் நேரத்திலும் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்கப்படாததால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி முறை கொண்டு வரப்பட்டது.

சிறப்பாக விளையாடி பல கோல்களை தடுத்த, 22 வயது இளம் கோல்காவலர் பேட்ரிக் பீச்சை மாற்றிவிட்டு,  34 வயது சீனியர்  கோல்காவலர் மேத்யூ ரயானை, ஆஸ்திரேலிய பயிற்சியாளர் களம் இறக்கினார்.

ஆனால், இந்த வியூகம் பலிக்கவில்லை. எகிப்தின் நட்சத்திர வீரர் முகமது சலா, முகமது சாபர், ரமி ராபியா, ஹோசாம் அப்தெல்மஜீத் ஆகியோர் கோல் அடிக்க, எகிப்து 4-2 என்ற கணக்கில் பெனால்டி  மாஸ் வெற்றி பெற்றது.

இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு எகிப்து அணி முன்னேறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset