நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ணம்: கடைசி நிமிட அதிரடியால் செனகலை வீழ்த்தியது பெல்ஜியம்

சியாட்டில்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கடைசி நிமிடத்தில் டையலெமன்ஸ் அடித்த கோலால் செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி பெற்றது.

பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன.

இதில் சுற்று 32 ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம், செனகல் அணிகள் விளையாடின.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் சியாட்டில் அரங்கில்  நடந்த இந்த போட்டியின் 24ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடிக்கப்பட்டது.

செனகல் அணியின் வீரர் ஹபீப் டையர்ரா முதல் கோலை போட்டார்.

எனினும், அதன்பின்னர் இரு அணிகளின் தரப்பிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-1 என செனகல் முன்னிலை பெற்றுள்ளது.

பிற்பாதியில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இதில் செனகல் அணியின் இஸ்மாயிலா சார் 51ஆவது நிமிடத்தில் அணிக்கான 2ஆவது கோலை போட்டார்.

2 கோல்களுடன் செனகல் முன்னிலையில் இருந்தது. பெல்ஜியம் அணி பின்தங்கி இருந்தது.

ஆனால், போட்டி முடிய கடைசி 5 நிமிடங்கள் இருந்தபோது, அதிசயம் நடந்தது.

86ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ரோம்லு லுகாகு கோல் போட்டு செனகல் அணிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 89ஆவது நிமிடத்தில் யூரி டையலெமன்ஸ் பெல்ஜியம் அணிக்கான மற்றொரு கோலை போட்டார்.

இதனால், 2-2 என போட்டி சமநிலை அடைந்தது. கூடுதல் நேரம் அளிக்கப்பட்டு, ஆட்டம் தொடர்ந்தது.

எனினும், மொத்தம் 120 நிமிடங்கள் வரை போட்டி நீடித்தும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

அதன்பின்னர் 125ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, யூரி டையலெமன்ஸ் அடித்த கோலால் பெல்ஜியம் அணி 3 கோல்களுடன் வெற்றி பெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset