செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: குரோஷியாவை வீழ்த்தி சுற்று 16க்கு முன்னேறிய போர்த்துகல்
டொரண்டோ:
போர்த்துகலுக்கு எதிராக தோல்வியடைந்த குரோஷியா நடப்பு உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது.
சுற்று 32 ஆட்டம் ஒன்றில் போர்த்துகல், குரோஷியா அணிகள் விளையாடின.
கனடாவின் டொரண்டோ மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர்.
எனினும், கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-0 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
பிற்பாதியில் இரு அணிகளும் முதல் கோலுக்காக கடுமையாக மல்லுக்கட்டின. அப்போது ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் அணியின் முதல் கோலை பதிவு செய்தார்.
இதையடுத்து தாக்குதல் ஆட்டத்தை போர்த்துகல் தீவிரப்படுத்திய நிலையில், ஆட்டத்தின் 68ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதனை ரொனால்டோ கோலாக மாற்றி சமநிலை ஏற்படுத்தினார்.
இதையடுத்து 2ஆவது கோலுக்காக இரு அணிகளும் கடுமையாக போராடினாலும் அதன்பின் எந்த கோலும் பதிவாகவில்லை.
90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கூடுதலாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
அப்போது ஆட்டத்தின் 90+4 நிமிடத்தில் போர்த்துகல் வீரர் கொண்ட்சாலோ ராமோஸ் அபாரமான கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.
இதனால் ஆட்ட நேர முடிவில் போர்த்துகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் சுற்று 16க்கு போர்த்துகல் அணி முன்னேறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2026, 8:28 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஆஸ்திரியாவை விழ்த்தியது ஸ்பெயின்
July 2, 2026, 11:22 am
ஃபிஃபா உலக கிண்ணம்; பொஸ்னியாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி
July 2, 2026, 10:07 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட அதிரடியால் செனகலை வீழ்த்தியது பெல்ஜியம்
July 2, 2026, 10:07 am
உலகக் கிண்ணம் இங்கிலாந்து வெற்றி: பெலேவின் சாதனையை முறியடித்த ஹாரி கேய்ன்
July 1, 2026, 2:00 pm
தென்கொரியக் கால்பந்து அணி வீரர்களுக்கு எதிராக விமான நிலையத்தில் எதிர்ப்பு முழக்கங்கள்
July 1, 2026, 8:09 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் சுற்று 16க்கு நார்வே முன்னேறியது
July 1, 2026, 8:06 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவீடனை வீழ்த்தியது பிரான்ஸ்
June 30, 2026, 3:45 pm
5 கிலோ எடை கொண்ட தங்கத்தினாலான FIFA உலகக் கோப்பையின் தற்போதைய மதிப்பு தெரியுமா?
June 30, 2026, 3:01 pm
