செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஆஸ்திரியாவை விழ்த்தியது ஸ்பெயின்
வாஷிங்டன்:
ஃபிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம்ல் செலுத்திய ஸ்பெயின் அணி அபார வெற்றி பெற்றது.
இதில் இன்று நடந்த சுற்று 32 ஆட்டத்தில், பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியும், ஆஸ்திரியா அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஸ்பெயின் வீரர்கள் பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர்.
ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில், ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் மைக்கேல் ஒயர்சபால், அதிரடியாக ஒரு கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார்.
இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 1 - 0 என முன்னிலை பெற்றது.
பிற்பாதியிலும் ஸ்பெயின் அணியின் பலத்த தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரியா வீரர்கள் திணறினர்.
ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெட்ரோ போரோ ஒரு அழகான கோல் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து போட்டியின் 89ஆவது நிமிடத்தில், மீண்டும் ஒருமுறை மாயாஜாலம் செய்த மைக்கேல் ஒயர்சபால் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
ஆட்ட நேர முடிவில் 3 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை துவம்சம் செய்த ஸ்பெயின் அணி, அடுத்த சுற்றுக்கு கம்பீரமாக தகுதி பெற்றது.
தோல்வியடைந்த ஆஸ்திரியா அணி உலகக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2026, 1:46 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: குரோஷியாவை வீழ்த்தி சுற்று 16க்கு முன்னேறிய போர்த்துகல்
July 2, 2026, 11:22 am
ஃபிஃபா உலக கிண்ணம்; பொஸ்னியாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி
July 2, 2026, 10:07 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட அதிரடியால் செனகலை வீழ்த்தியது பெல்ஜியம்
July 2, 2026, 10:07 am
உலகக் கிண்ணம் இங்கிலாந்து வெற்றி: பெலேவின் சாதனையை முறியடித்த ஹாரி கேய்ன்
July 1, 2026, 2:00 pm
தென்கொரியக் கால்பந்து அணி வீரர்களுக்கு எதிராக விமான நிலையத்தில் எதிர்ப்பு முழக்கங்கள்
July 1, 2026, 8:09 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் சுற்று 16க்கு நார்வே முன்னேறியது
July 1, 2026, 8:06 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவீடனை வீழ்த்தியது பிரான்ஸ்
June 30, 2026, 3:45 pm
5 கிலோ எடை கொண்ட தங்கத்தினாலான FIFA உலகக் கோப்பையின் தற்போதைய மதிப்பு தெரியுமா?
June 30, 2026, 3:01 pm
