செய்திகள் விளையாட்டு
கனடா ஓபனில் அபார வெற்றி: அரையிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தார் லீ ஜீ ஜியா
கோலாலம்பூர்:
தேசிய ஆண்கள் ஒற்றையர் பூப்பந்து நட்சத்திரம் லீ ஜீ ஜியா, கனடா ஓபன் பூப்பந்து தொடரின் காலிறுதியில் தைவானின் வாங் போ-வெய்யை 21-15, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, அபாரமான ஆட்டத்துடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
மார்க்ஹாம் பான் அம் மையத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், வெறும் 34 நிமிடங்களிலேயே வெற்றியை உறுதிப்படுத்திய ஜீ ஜியா, இந்தச் சீசனில் முதல் முறையாக அரையிறுதி சுற்றை எட்டியுள்ளார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, எந்த சர்வதேச தொடரிலும் அரையிறுதிக்கு முன்னேறாதிருந்த உலகின் 60-ஆவது தரவரிசை வீரரான ஜீ ஜியா, இந்த வெற்றியின் மூலம் மீண்டும் தனது பழைய ஆட்டத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
அரையிறுதியில், ஜப்பானின் ரிக்கி தகேயியை ஜீ ஜியா எதிர்கொள்ளவுள்ளார். கடந்த மாதம் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச்சுற்றில் தகேயியை வீழ்த்தியிருந்த ஜீ ஜியா, அந்த வெற்றியை மீண்டும் தொடரும் உறுதியுடன் களமிறங்குகிறார்.
இதனால், கனடா ஓபனில் ஜீ ஜியாவின் வெற்றிப் பயணம் மேலும் விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், சாம்பியன் பட்டத்தை நோக்கிய அவரது அடுத்த கட்டப் போராட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 4, 2026, 2:17 pm
உலகக் கிண்ணம்: கானாவை வீழ்த்திய கொலம்பியா
July 4, 2026, 9:53 am
உலகக் கிண்ணம்: பெனால்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது எகிப்து
July 4, 2026, 9:52 am
உலகக் கிண்ணம்: கேப் வெர்டே அணியை வீழ்த்தி நூலிழையில் பிழைத்த அர்ஜெண்டினா
July 3, 2026, 1:46 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: குரோஷியாவை வீழ்த்தி சுற்று 16க்கு முன்னேறிய போர்த்துகல்
July 3, 2026, 8:28 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஆஸ்திரியாவை விழ்த்தியது ஸ்பெயின்
July 2, 2026, 11:22 am
ஃபிஃபா உலக கிண்ணம்; பொஸ்னியாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி
July 2, 2026, 10:07 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட அதிரடியால் செனகலை வீழ்த்தியது பெல்ஜியம்
July 2, 2026, 10:07 am
உலகக் கிண்ணம் இங்கிலாந்து வெற்றி: பெலேவின் சாதனையை முறியடித்த ஹாரி கேய்ன்
July 1, 2026, 2:00 pm
