நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ணம்: கேப் வெர்டே அணியை வீழ்த்தி நூலிழையில் பிழைத்த அர்ஜெண்டினா

நியூயார்க்:

அர்ஜெண்டினாவுக்கு கடும் சவால் விடும் வகையில் விளையாடிய கேப் வெர்டே, சொந்த கோலால் நூலிழையில் தோல்வியை சந்தித்தது.

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சுற்று 32 ஆட்டம் ஒன்றில் முதல் நிலை அணியான அர்ஜெண்டினா கேப் வெர்டேவை எதிர்கொண்டது.

இதில் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா எளிதான வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 120 நிமிடங்கள் போராடி கேப் வெர்டே நூலிழையில் தோல்வியை சந்தித்தது.

ஆட்டம் தொடங்கிய 29ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார்.

அதன்பின் முதல் பாதி நேர ஆட்ட முடிவில் இரண்டு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை.

பிற்பாதி நேர ஆட்டத்தில் கேப் வெர்டே வீரர்களில் ஆதிக்கம் செலுத்தினர். அர்ஜெண்டினாவின் தடுப்பை உடைத்து 59-வது நிமிடத்தில் கோல் அடித்தது.

அந்த அணியின் டெராய் டுவார்டே கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.

அதன் பின் அர்ஜெண்டினா வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் 90 நிமிட ஆட்ட முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலைப் பெற்றது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

முதல் 15 நிமிட கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. அர்ஜென்டினா வீரர் மார்ட்டினஸ் 92ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

முதல்பாதி நேரம் ஆட்டம் முடிவடைவதற்கு சற்று முன், அதாவது 103ஆவது நிமிடத்தில் கேப் வெர்டே அணியின் கேப்ரல் அபாரமாக கோல் அடித்தார்.

இதனால் முதல்பாதி நேரத்தில் 2-2 என  சமநிலை பெற்றது.

111ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் அடித்த பந்தை கேப் வெர்டே அணியின் டைனி தடுக்க முயன்றார்.

ஆனால், பந்து அவர் மீது பட்டு, அவர்களது கோல் கம்பத்திற்குள் புகுந்தது. இதனால் ஓன்கோல் மூலம் அர்ஜெண்னடினாவிற்கு ஒரு கோல் கிடைத்தது.

ஆகவே, அர்ஜெண்டினா 3-2 என முன்னிலைப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset