செய்திகள் உலகம்
மோட்டார் சைக்கிள் திருடர்களை டேப்பால் கட்டி வைத்த முகமூடி மனிதர்: மெக்சிகோவில் வைரலாகும் புகைப்படம்
லாகோஸ் டி மொரேனோ:
மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தின் லாகோஸ் டி மொரேனோ நகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் சிலர் மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, மின்சாரக் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத்தில் அவர்களது உடல் டேப்பால் ஒட்டப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது.
ஜாலிஸ்கோவின் பல பகுதிகளில் இது போன்று மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள், டேப் மூலம் கட்டி வைக்கப்பட்ட நிலையில் கண் டறியப்பட்டனர்.
இதையடுத்து சமூக ஊடக வாசிகள், இணையத்தில் "லாகோஸ் டி மொரேனோவின் பேட்மேன், வவ்வால் மனிதன்" என்று அறியப்படும் மர்மமான நபர் ஒருவரை வைரலாக்கியுள்ளனர்.
அவர் தான் இந்த திருடர்களைக் கண்டறிந்து கட்டி வைத்துள்ளார் என்று புகழ்பாடுகின்றனர்.
பொது இடங்களில் ஆண்கள் டேப் மூலம் கட்டி வைக்கப்பட்டிருப்பதையும், சில சமயங்களில் அவர்கள் திருடியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு அருகிலேயே அவர்கள் கட்டி வைக்கப் பட்டிருப்பதையும் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாயின.
இந்நிலையில் அந்தச் செயலைச் செய் தது யார் என்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து சமூக ஊடகவாசிகள், அந்த மர்ம நபருக்கு உடனடியாக 'பேட்மேன்' என்ற புனைப்பெயரைச் சூட்டினர். இச்செய்தி எக்ஸ் தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
