செய்திகள் மலேசியா
கூட்டரசு மற்றும் மாநில அரசாங்கங்களின் கூட்டு ஒத்துழைப்பு ஜொகூர் மாநில வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: ஙா கோர் மிங்
கோலாலம்பூர்-
ஜொகூர் மாநில வளர்ச்சியானது கூட்டரசு மற்றும் மாநில அரசாங்கங்களின் கூட்டு ஒத்துழைப்பு வாயிலாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதனை வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.
இரு அரசாங்கங்களின் ஒத்துழைப்பினால் ஜொகூர் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைவது திண்ணம்.
இதனால் பொருளாதார மேம்பாடு, முதலீட்டாளர்களை ஈர்த்தல், மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க செய்தல் என்பது ஏற்படும் என்று அமைச்சர் சொன்னார்.
முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக ஜொகூர் மாநிலம் 110 பில்லியன் ரிங்கிட்டை ஈட்டியது.
ஆக, மாநில வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் கூட்டரசு மற்றும் மாநில அரசாங்கம் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 12:03 am
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
July 4, 2026, 5:46 pm
