செய்திகள் மலேசியா
பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் பன்னீர் செல்வத்தின் வெற்றி மிகப் பெரிய வரலாறாக அமையும்: ஜாஹித்
ஜொகூர்பாரு:
பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் பன்னீர் செல்வத்தின் வெற்றி நாளை மிகப் பெரிய வரலாறாக அமையும்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார்.
மஇகாவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் இத்தொகுதியில் போட்டியிடும் முதல் இந்திய வேட்பாளராக விளங்குகிறார்.
இதன் அடிப்படையில் இத்தொகுதியில் பன்னீர் செல்வம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
இத்தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்கள் முழுமையாக பன்னீர் செல்வத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
அதே வேளையில் மலாய், சீன வாக்காளர்களின் வாக்குகளை பெற கூட்டணியில் உள்ள கட்சிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இதன் மூலம் பன்னீர் செல்வம் வெற்றி பெற்றால் அது மிகப் பெரிய வரலாறாக மாறும்.
குறிப்பாக இத்தொகுதியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பன்னீர் செல்வம் படைப்பார்.
ஆகவே தேசிய முன்னணி வேட்பாளரான பன்னீர் செல்வத்திற்கு பெர்லிங் வாக்காளர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோளாகும்.
பெர்லிங்கில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 12:03 am
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
July 4, 2026, 5:46 pm
