செய்திகள் மலேசியா
தொழில்முனைவோர் நிதியில் அரசியல் செல்வாக்கு, சிபாரிசு கடிதங்களுக்கு முற்றுப்புள்ளி: பிரதமர் அன்வார் கடும் எச்சரிக்கை
புத்ராஜெயா:
தொழில்முனைவோருக்கான நிதியுதவிகளை வழங்கும் நடைமுறையில் சிபாரிசு கடிதங்கள், அரசியல் செல்வாக்கு, உறவினராட்சி (குரோனிசம்) போன்ற செயல்பாடுகளுக்கு இனி இடமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
PUNB ஏற்பாடு செய்திருந்த SParK 2026 நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், இத்தகைய முறைகேடுகள் அரசுத் துறைகளுக்கு நிதி இழப்பை ஏற்படுத்துவதோடு, பல தொழில்கள் தோல்வியடையவும் காரணமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
நிதி அமைச்சருமான அவர், அரசின் உதவியும் நிதியுதவியும் உண்மையான அர்ப்பணிப்பு, திறமை, தொழிலை முன்னேற்றும் உறுதியைக் கொண்ட தொழில்முனைவோருக்கே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"எனது இந்தக் கருத்தால் சிலர் அதிருப்தியடையலாம். ஆனால் இதுவே உண்மை," என்று அவர் தெரிவித்தார்.
சந்தை நிலவரம் போன்ற காரணங்களால் தொழில்கள் தோல்வியடைவதை அரசால் தடுக்க முடியாது என்றாலும், பொதுமக்களின் வரிப்பணத்தைத் தவறாக பயன்படுத்துவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் பிரதமர் எச்சரித்தார்.
அரசின் நிதியுதவியைப் பெற்ற சிலர், தொழிலை மேம்படுத்துவதற்குப் பதிலாக ஆடம்பர அலுவலகங்களுக்கு இடம் மாறுதல், விலை உயர்ந்த வாகனங்கள் வாங்குதல் உள்ளிட்ட சொகுசு வாழ்க்கைக்காக நிதியைப் பயன்படுத்தி, இறுதியில் தொழிலைத் தோல்வியடையச் செய்த சம்பவங்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அரசு நிதியின் ஒவ்வொரு ரிங்கிட்டும் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், தகுதியும் நேர்மையும் கொண்ட தொழில்முனைவோருக்கு மட்டுமே தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 4, 2026, 5:46 pm
புதுமையான சுற்றுலா தயாரிப்புகளை உருவாக்குங்கள்: தனியார் துறைக்கு அமைச்சர் கோரிக்கை
July 4, 2026, 2:23 pm
