செய்திகள் மலேசியா
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
பெர்லிங்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது.
மஇகா உதவித் தலைவத் டத்தோ முருகையா இதனை கூறினார்.
டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் விடுதலைக்கு வழிவகுக்கும் என்று கூறப்படும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியின் மகத்தான வெற்றி ஆதாரமற்றது.
மேலும் வாக்காளர்களை அச்சுறுத்தும் நோக்கத்தைக் கொண்டது மட்டுமே.
அரச மன்னிப்பு தொடர்பான முடிவு எந்தவொரு அரசியல் கட்சியின் அதிகாரத்தின் கீழும் இல்லை.
மாறாக அது கூட்டரசு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள செயல்முறைக்கு உட்பட்டது.
கூட்டரசு அரசியலமைப்பின் 42ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி, மன்னிப்பு வாரியத்திற்கு ஒரு தெளிவான செயல்முறையும் உறுப்பினர் அமைப்பும் உள்ளது.
மேலும் அது தேர்தலில் தேசிய முன்னணி வெற்றியால் தீர்மானிக்கப்படுவதில்லை.
ஜொகூரில் தேசிய முன்னணி பெரும் வெற்றி பெற்றால், டத்தோஸ்ரீ நஜிப் விடுவிக்கப்படுவார் என்று கூறி மக்களைப் பயமுறுத்தாதீர்கள்.
அது தேசிய முன்னணியின் பலமும் அல்ல. எந்தவொரு அரசியல் கட்சியின் பலமும் அல்ல.
பெர்லிங்கில் நடைபெற்ற தேசிய முன்னணி பிரச்சாரக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய சமூகத்தினருடனான நட்புறவு சந்திப்பில் உரையாற்றியபோது அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2026, 5:46 pm
