நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கில் ரோஹிங்கியா கால்பந்து லீக்: 20,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு அறிவிப்பு சர்ச்சையானது

கோலாலம்பூர்: 

பினாங்கில் ரோஹிங்கியா சமூகத்தினருக்காக நடத்தப்படவுள்ள கால்பந்து லீக்கில், வெற்றி வாகை சூடும் அணிக்கு 20,000 ரிங்கிட் வரை ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பினாங்கு சர்ப்ளஸ் நலச்சங்கத்தின் தலைவர் மொஹ்ட் சோஃபியான் மொஹ்ட் சைன், மலேசியாவில் வசிக்கும் ரோஹிங்கியா சமூகத்தில் பலர் தொழில், வணிகத்தில் ஈடுபட்டு கணிசமான வருமானம் ஈட்டுவதாகக் கூறினார்.

மேலும், ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR)-இல் 100,000-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவணங்களின்றி நாட்டில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரோஹிங்கியா சமூகத்தின் நடமாட்டத்தையும் பொருளாதார நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பிற நாடுகளைப் போல அவர்களைக் குறிப்பிட்ட பகுதிகளில் தங்க வைக்கும் நடைமுறையைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, ரோஹிங்கியா சமூகத்தினர் கட்டுப்பாடின்றி இயங்குவது உள்ளூர் மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்புவதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

இதற்கு முன்னர், புக்கிட் மெர்தாஜாமில் நடைபெறவுள்ள ரோஹிங்கியா கால்பந்து லீக்கிற்கான விளம்பரப் பதாகை சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் சாம்பியன் அணிக்கு 20,000 ரிங்கிட், இரண்டாம் இடத்திற்கு 10,000 ரிங்கிட், மூன்றாம் இடத்திற்கு 5,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset