செய்திகள் மலேசியா
மக்களைப் புரிந்துகொள்ளும் துணிச்சலான தலைவர்கள் ஜொகூருக்குத் தேவை: பிரதமர்
ஜொகூர்பாரு:
மக்களைப் புரிந்துகொள்ளும் துணிச்சலான தலைவர்கள் ஜொகூருக்குத் தேவை.
பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்த நிலையில், முடிவுகளை எடுப்பதில் துணிச்சலும், மக்களின் முன்னுரிமைகளைப் புரிந்துகொள்ளும் திறனும் கொண்ட தலைமை ஜொகூருக்குத் தேவை.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பிரச்சினைகளை விவேகமாக மதிப்பிடவும், உள்ளூர் சமூகத்தின் நாடித்துடிப்பை உண்மையாகப் புரிந்துகொள்ளவும் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
கடவுள் விரும்பினால் நம்பிக்கை கூட்டணி தொடர்ந்து மக்களின் குரல்களை வெளிக்கொணர்ந்து, ஜொகூரின் நலன்களைப் பாதுகாத்து, இந்த மாநிலத்தை அனைவருக்கும் ஏற்ற, மேலும் வளர்ச்சியடைந்த, சிறந்த மாநிலமாக உயர்த்தும் என்று அவர் முகநூலில் கூறினார்.
ஜொகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11 அன்று நடைபெறும்.
அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உள்ளது.
மொத்தம் 27,27,926 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 27,03,175 பேர் சாதாரண வாக்காளர்கள் ஆவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 12:03 am
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
July 4, 2026, 5:46 pm
