செய்திகள் மலேசியா
மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் கல்லூரி ஊழியர்கள் தேடப்படுகின்றனர்: போலிஸ்
ஷாஆலம்:
மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் கல்லூரி ஊழியர்கள் தேடப்படுகின்றனர்.
ஷாஆலம் போலிஸ் தலைவர் ஷாருடின் சமா இதனை கூறினார்.
ஷாஆலத்தில், இரண்டு மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய, குதப்புணர்ச்சி செய்ததாக சந்தேகத்தின் பேரில், சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றப் பின்னணி கொண்ட ஒரு கல்லூரி ஊழியர் தேடப்பட்டு வருகிறார்.
கிளேன்மேரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களிடமிருந்து, கல்லூரியின் ஊழியர் என்று நம்பப்படும் ஒரு நபர் சம்பந்தப்பட்டதாக நேற்று போலிஸ்க்கு ஒரு புகார் வந்ததாகத் தெரிவித்தார்.
முதல் பாதிக்கப்பட்டவர், கல்லூரி தங்குமிடக் கழிப்பறையில் இருந்தபோது தான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறினார்.
மற்றொரு பாதிக்கப்பட்டவர், ஷா ஆலம், செக்சன் 18-ல் உள்ள அதே சந்தேக நபரின் வீட்டில் இருந்தபோது குதப்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 12:03 am
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
July 4, 2026, 5:46 pm
