நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர், சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டல பெருந்திட்டத்திற்கு சிங்கப்பூர் ஒப்புதல் தேவையில்லை: ஓன் ஹபிஸ்

ஜொகூர்பாரு:

ஜொகூர், சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டல பெருந்திட்டத்திற்கு சிங்கப்பூர் ஒப்புதல் தேவையில்லை.

ஜொகூர் தேசிய முன்னணி தலைவர் ஓன் ஹபிஸ் காஸி இதனை கூறினார்.

ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டல  பெருந்திட்டமானது ஒரு மலேசிய அரசாங்க ஆவணம். அதற்கு சிங்கப்பூர் ஒப்புதல் தேவையில்லை.

சிங்கப்பூர் அரசாங்கத்துடனான கலந்துரையாடல், கருத்துகள் பெறும் செயல்முறை நிறைவடைந்துவிட்டது.

புத்ராஜெயாவால் தொடங்கப்படுவதற்காக மட்டுமே காத்திருப்பதாகவும் அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அமைச்சு அல்லது மலேசிய மத்திய அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும் ஒரு விழாவில் இது தொடங்கப்படுவது மட்டுமே எஞ்சியுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset