நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனித்துப் போட்டியிடும் தனது திறனை தேசிய முன்னணி மதிப்பிடுவதற்கு ஜொகூர் மாநிலத் தேர்தல் ஒரு சோதனைக்களம்: கைரி

கோத்தா திங்கி:

தனித்துப் போட்டியிடும் தனது திறனை தேசிய முன்னணி மதிப்பிடுவதற்கு ஜொகூர் மாநிலத் தேர்தல் ஒரு சோதனைக்களமாகும்.

முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.

மற்ற மாநிலத் தேர்தல்கள், பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தனது தனிநபர் போட்டி உத்தியின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக தேசிய முன்னணி ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகளை ஒரு சோதனைக் களமாகப் பயன்படுத்தும்.

தேர்தல் உத்தி குறித்து தேசிய முன்னணி தலைமை அவசர முடிவுகளை எடுக்காது.

மாறாக ஜொகூர் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அனைத்துக் காரணிகளையும் மதிப்பீடு செய்யும்.

சூழ்நிலைக்கு ஏற்ப தேசிய முன்னணி தலைமை அவ்வப்போது முடிவுகளை எடுக்கும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

ஆனால் ஜொகூர் ஒரு தனித்துவமான சோதனைக் களம்.

ஏனென்றால் இங்கு நாம் தனிநபர் போட்டியில் பங்கேற்க முடியும் என்று கைரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset