நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பங்சா ஜொகூர் கொள்கையை புறக்கணிப்பவர்களை வாக்காளர்கள் புறந்தள்ள வேண்டும்

ஜொகூர் பாரு- 

பங்சா ஜொகூர் கொள்கையைப் புறக்கணிப்பவர்களை ஜொகூர் மாநில மக்கள் தேர்தலில் புறந்தள்ள வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மத் அக்மால் சாலே கூறினார்.

தேசிய முன்னணி வெற்றியானது மாநில மக்கள் இந்த வெற்றியை எளிதாக எடுக்காமல் மாற்றத்திற்கான அரசியல் சமிக்ஞையாக பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஜொகூர் மாநில மந்திரி பெசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டாலும் ஜொகூர் மாநில மக்கள் ஒரே குடையின் கீழ் செயல்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மற்ற கட்சிகளுக்கு மந்திரி பெசார் அவர்கள் வழி விடாததால் அவரின் தலைமை மீது அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிகளும் ஏற்படுத்தபப்ட்டுள்ளன. 

ஜொகூர் மாநில தேர்தலில் தேசிய முன்னணி 56 இடங்களில் சுயேட்சையாக களம் காண்கிறது. 

-மவித்திரன்

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset