நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செரியானில் கொடூர தீ விபத்து: உடல் கருகி பலியான மகள்

கூச்சிங்: 

சரவாக் மாநிலம் செரியானில் நள்ளிரவில் ஏற்பட்ட கோர வீட்டுத் தீ விபத்தில், 37 வயதுடைய பெண் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 65 வயது தாயார் இரண்டாம் நிலை தீக்காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கம்போங் துபிஹ் பத்து ராவுங், ஜாலான் தெபெடுவின் 23-ஆவது கிலோமீட்டரில் அமைந்திருந்த ஒரு மாடி வீடு நள்ளிரவு 12 மணியளவில் திடீரென தீப்பிடித்து, கணநேரத்தில் முழுவதுமாக எரிந்து நாசமானது.

உயிரிழந்தவர் நூருல் ஃபர்ஹானா அமெருடின் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது தாயார் ஷரீஃபா போக் வான் முஹ்சின் (65), முகம், கழுத்து, முதுகு, கைகள், பாதங்களில் இரண்டாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவசர அழைப்பைத் தொடர்ந்து, செரியான், சிபுரான் தீயணைப்பு, மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்பே, காயமடைந்த முதியவர் அப்பகுதி மக்களால் சேரியன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில், வீட்டின் குளியலறைப் பகுதியில் கருகிய நிலையில் சிக்கியிருந்த நூருல் ஃபர்ஹானாவின் உடல், போலிஸார், மருத்துவ அதிகாரிகளின் உதவியுடன் மீட்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது.

இந்த தீ விபத்திற்கான காரணமும் ஏற்பட்ட சொத்து சேதத்தின் மதிப்பு குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset