செய்திகள் மலேசியா
நய்மாவும் அவரது பிள்ளைகளும் வெளிநாட்டில் இருக்கலாம்: உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் தகவல்
கோலாலம்பூர்-
நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடினின் மனைவியும் அவரது பிள்ளைகளும் வெளிநாட்டில் இருக்கலாம் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
நய்மா காலித்தையும் அவரது பிள்ளைகளையும் தேடும் படலத்தில் காவல்துறை செயல்பட்டு வருவதையும் அமைச்சர் விவரித்தார்.
அரசாங்கத்தைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உதவ அவர்கள் தேவைப்படுகின்றனர் என்று அவர் சொன்னார்.
அவர்கள் வெளிநாட்டில் குறிப்பாக ஐரோப்பாவில் இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாண்டு தொடக்கத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி திட்டம் நிகழ்த்தப்பட்டதாக நய்மா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இருப்பினும், தனக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் நய்மா காலித் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 12:03 am
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
July 4, 2026, 5:46 pm
