செய்திகள் மலேசியா
நாட்டின் இறையாண்மை, மனித உரிமை மீறல்களில் மலேசியா நடுநிலை போக்கினை வகிக்காது- பிரதமர் அன்வார் திட்டவட்டம்
கோலாலம்பூர்-
நாட்டின் இறையாண்மை, அடிப்படை மனித உரிமை விவகாரங்களில் மலேசியா என்றும் நடுநிலை போக்கினை கடைப்பிடிக்காது என்று நாட்டின் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக கூறினார்.
மலேசியா அனைத்து நாடுகளுடனும் நட்புறவோடு இருக்கும் அதேவேளையில் அனைத்துலக சமூகங்களுடன் சுயேட்சையான வெளியுறவு கொள்கையைக் கொண்டிருக்கிறது.
இருப்பினும், சில கொள்கை விவகாரங்களில் மலேசியா நிச்சயமாக அதன் வலுவான குரலைப் பதிவு செய்து வருவதாக அன்வார் தெரிவித்தார்.
புவிஅரசியல் சுய லாபத்திற்காக மலேசியா எந்தவொரு தரப்புக்கும் ஆதரவு அளிக்காமல் தொடர்ந்து யாருக்கும் ஆதரவு இல்லாத நிலைப்பாட்டில் மலேசியா உள்ளது என்றும் உலக நாடுகளுடன் மலேசியா தொடர்ந்து அதன் நட்பை பாராட்டும் என்று ஆசிய பசிபிக் வட்டமேஜை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கெடுத்து கொண்ட பிரதமர் அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
உலகளவில் ஏற்பட்டுள்ள போர்களுக்கு சுமூகமான தீர்வுகளை எட்ட வேண்டும் என்பதையே மலேசியா விரும்புவதாகவும் அதற்கு அனைத்துலக சமூகம் கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2026, 3:16 pm
ஓன் ஹாஃபிஸ் மந்திரி பெசாரானதால் ஜொகூர் மாநிலம் இன்னும் மேம்பட்டது: ஸாஹித் ஹமிடி கருத்து
July 2, 2026, 2:44 pm
தாய்லாந்து குண்டுவெடிப்பு சம்பவம்: மலேசியப் பயணிகள் இலக்கு அல்ல
July 2, 2026, 1:21 pm
அலி கமெனியின் இறுதிச் சடங்கில் நாட்டின் பிரதிநிதியாக முஹம்மது சாபு பங்கேற்பார்: பிரதமர்
July 2, 2026, 1:06 pm
உலக கிண்ணம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 32 சீன நாட்டவர்கள் கைது: காவல்துறை நடவடிக்கை
July 2, 2026, 12:59 pm
