செய்திகள் மலேசியா
உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்; ஜூலை 5ஆம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது: தர்மலிங்கம்
ஈப்போ:
பேரா மாநிலத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கும், உலு கிந்தா தஞ்சோங் ரம்புத்தானில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆலயத் தலைவர் திரு. க. தர்மலிங்கம் கூறுகையில்,
வரும் ஜூலை 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் உள்ள உகந்த நல்ல நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
மலையடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இந்த ஆலயம் 1963ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
தற்போது நடைபெறவுள்ளது ஆலயத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேக விழாவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில், பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான டத்தோ அ. சிவநேசன், தம்பூன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்பு அதிகாரி டத்தோ சுரேஷ் ஆகியோர் சிறப்பு வருகை புரிய கொள்ளவுள்ளனர்.
மேலும், இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயம் சுமார் 3 லட்சம் வெள்ளி செலவில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது என்று தர்மலிங்கம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2026, 3:16 pm
ஓன் ஹாஃபிஸ் மந்திரி பெசாரானதால் ஜொகூர் மாநிலம் இன்னும் மேம்பட்டது: ஸாஹித் ஹமிடி கருத்து
July 2, 2026, 1:21 pm
அலி கமெனியின் இறுதிச் சடங்கில் நாட்டின் பிரதிநிதியாக முஹம்மது சாபு பங்கேற்பார்: பிரதமர்
July 2, 2026, 1:06 pm
உலக கிண்ணம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 32 சீன நாட்டவர்கள் கைது: காவல்துறை நடவடிக்கை
July 2, 2026, 12:59 pm
