நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸ் பெருங்கடை வாகன நிறுத்துமிடத்தில் வன்முறை மோதல்: 12 பேர் கைது

கோலாலம்பூர்: 

செராஸில் உள்ள பிரபல பெருங்கடை ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் இடம்பெற்ற வன்முறை மோதல், கலவரச் சம்பவம் தொடர்பாக, 12 உள்ளூர் நபர்களைப் போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபடில் மார்சூஸ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூன் 29ஆம் தேதி, தலைநகரைச் சுற்றியுள்ள மூன்று தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் அனைத்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றதாகக் கூறப்படும் ஒரு குழுவினரை அப்பகுதியில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் எச்சரித்ததைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே முதலில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அது வன்முறை மோதலாக வெடித்ததாகவும் தெரியவந்துள்ளது.

"சம்பவத்தில் உடலில் லேசான காயமடைந்த ஒருவர் அளித்த போலிஸ் புகாரின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது," என்று ஃபடில் மார்சூஸ் கூறினார்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் விசாரணைக்காக ரிமாண்ட் செய்யப்பட்ட பின்னர், போலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு, பொது இடத்தில் கூட்டாக கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், தண்டனைச் சட்டம் பிரிவு 148-இன் படி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset