நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலக கிண்ணம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 32 சீன நாட்டவர்கள் கைது: காவல்துறை நடவடிக்கை 

கோலாலம்பூர்- 

ஃபிஃபா உலக கிண்ண காற்பந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் சூழ்நிலையில்  செராஸில் கடை அலுவலகம் ஒன்றின் உள்ளே உலக கிண்ண சூதாட்டங்கள் நடந்தன. 

இந்த சூதாட்டத்தை முறியடிக்கும் விதமாக காவல்துறையினர் 32 சீனா நாட்டு ஆடவர்களைக் கைது செய்தனர் என்று கோலாலம்பூர் காவல்துறை தலைவர் ஃபாடில் மர்சுஸ் கூறினார். 

செராஸ் மாவட்ட குற்றப்புலனாய்வு போலீஸ் பிரிவு நடத்திய இந்த அதிரடி சோதனையில் 29 ஆண்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்கள் முறையே 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் கூறினார். மேலும், காவல்துறையினர் 28 மடிக்கணினிகள், விவேக கைப்பேசிகள் மற்றும் இணைய மோடமையும் பறிமுதல் செய்தனர். 

இந்த சம்பவம் 1953ஆம் ஆண்டு சூதாட்ட விடுதி சட்டத்தின் செக்‌ஷன் 4(1)(C) யின் கீழ் விசாரணை செய்ய்யப்படும் அதேவேளையில் 1959/63 குடிநுழைவு சட்டத்தின் செக்‌ஷன் 6(1) யின் கீழும் விசாரணை செய்யப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் விசாரணைக்காக ஜூலை 4ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset