நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இயங்கலையில் நிகழும் மோசடி குற்றத்தை கையாள சிறப்பு  செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது- ஃபஹ்மி ஃபட்சில் தகவல் 

கோலாலம்பூர்- 

இயங்கலையில் நிகழும் மோசடி குற்றங்களைக் கையாள சிறப்பு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார். 

இயங்கலையில் மோசடி குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதனை களைய இந்த சிறப்பு செயற்குழு கடந்த ஜூன் 18ஆம் தேதி அமைக்கப்பட்டதாக மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான அவர் தெரிவித்தார். 

இந்த சிறப்பு செயற்குழுவின் முதலாவது கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் இது தொடர்பான அமைச்சுகள், அரசு நிறுவங்கள் உட்படுத்தப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார். 

அமலாக்கம், சட்டம் மற்றும் விசாரணை ஆகிய அம்சங்களில் இயங்கலையில் நிகழும் மோசடி குற்றங்களை தடுக்க நடப்பு மடானி அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக அவர் சொன்னார். 

சிறப்பு செயற்குழுவினால் பல நல்ல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று அரசாங்கம் எண்ணுவதாகவும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

-மவித்திரன் 

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset