நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அலி கமெனியின் இறுதிச் சடங்கில் நாட்டின் பிரதிநிதியாக முஹம்மது சாபு பங்கேற்பார்: பிரதமர்

கோலாலம்பூர்:

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமெனியின் இறுதிச் சடங்கில், நாளை தெஹ்ரானில் நாட்டின் பிரதிநிதியாக வேளாண்மை,  உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மது சாபு பங்கேற்பார் என பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

3ஆவது ஆசிய-பசிபிக் வட்டமேசை மாநாட்டையொட்டி நடைபெற்ற ஒரு சாதாரண கலந்துரையாடல் அமர்வில் பேசிய டத்தோஶ்ரீ அன்வார்,

இறுதி சடங்கில் கலந்துகொள்ள தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த பணிகள் காரணமாக தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை.

நாளை டெஹ்ரானில் நடைபெறும் கமெனியின் இறுதிச் சடங்கிற்கு, நாட்டின் பிரதிநிதியாக வேளாண்மை அமைச்சரை அனுப்புவோம் என்று அவர் கூறினார்.

86 வயதான கமெனி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்க, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்படுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஈரானை வழிநடத்தினார்.

பின்னர் அவருக்குப் பிறகு அவரது மகன் மொஜ்தபா கமெனி பதவியேற்றார்.

நான்கு மாதங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இறுதிச் சடங்கு, ஜூலை 3 முதல் 9 வரை தெஹ்ரான், கோம்,  மஷ்ஹத் ஆகிய இடங்களில் நடைபெறும்.

மேலும், நாளை தெஹ்ரானில் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கான சிறப்பு விழா ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset