செய்திகள் மலேசியா
ஜொகூர், புத்ராஜெயா இடையிலான உறவு தொடர்ந்து பரிச்சியமாக இருத்தல் வேண்டும்: ஸாஹித் ஹமிடி எதிர்பார்ப்பு
ஜொகூர் பாரு-
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் நிறைவடைந்ததும் தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால் புத்ராஜெயா, ஜொகூர் இடையிலான உறவுகளை மேம்படுத்த தேசிய முன்னணி முயற்சிகளை மேற்கொள்ளும்
இந்த தகவலை நாட்டின் துணைப்பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார்.
ஜொகூர் மாநில தேர்தலையொட்டி அனைத்து 56 சட்டமன்ற இடங்களுக்கும் தேசிய முன்னணியும் மத்தியில் உள்ள நம்பிக்கை கூட்டணி நேரடியாக மோதுகின்றன.
நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து இருகின்றன. இருந்தும் ஜொகூர் மாநில தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமக்கு தலைசுற்றல் ஏற்படுவதாக மாத தொடக்கத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்
ஜொகூர் மாநில தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் ஜொகூர் மாநில அரசாங்கம் மத்தியில் ஆளும் நம்பிக்கை கூட்டணிக்குத் தனது ஆதரவினை வழங்கும் என்று ஸாஹித் ஹமிடி உறுதியளித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2026, 3:16 pm
ஓன் ஹாஃபிஸ் மந்திரி பெசாரானதால் ஜொகூர் மாநிலம் இன்னும் மேம்பட்டது: ஸாஹித் ஹமிடி கருத்து
July 2, 2026, 2:44 pm
தாய்லாந்து குண்டுவெடிப்பு சம்பவம்: மலேசியப் பயணிகள் இலக்கு அல்ல
July 2, 2026, 1:21 pm
அலி கமெனியின் இறுதிச் சடங்கில் நாட்டின் பிரதிநிதியாக முஹம்மது சாபு பங்கேற்பார்: பிரதமர்
July 2, 2026, 1:06 pm
உலக கிண்ணம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 32 சீன நாட்டவர்கள் கைது: காவல்துறை நடவடிக்கை
July 2, 2026, 12:59 pm
