செய்திகள் மலேசியா
ஓன் ஹாஃபிஸ் மந்திரி பெசாரானதால் ஜொகூர் மாநிலம் இன்னும் மேம்பட்டது: ஸாஹித் ஹமிடி கருத்து
ஜொகூர் பாரு-
2022ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றிப்பெற்றது.
இந்த வெற்றியின் காரணமாக தேசிய முன்னணியை சேர்ந்த டத்தோ ஓன் ஹாபிஸ் காஸி மாநில மந்திரி பெசாராக பொறுப்பேற்றார்.
அவரின் காலத்தில் ஜொகூர் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சிகளைப் பதிவு செய்த அதேவேளையில் மாநில மக்களும் மேம்பாடு அடைந்ததாக துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார்.
தேசிய முன்னணி சார்பாக ஹஸ்னி முஹம்மத் மாநில மந்திரி பெசார் வேட்பாளராக இருந்தாலும் மாநில ஆட்சியாளரின் ஆணையின் பேரில் டத்தோ ஓன் ஹாபிஸ் காஸி ஜொகூர் மாநில மந்திரி பெசாராக பொறுப்பேற்றார்.
ஓன் ஹாபிஸ் தலைமையின் கீழ் இருந்த ஜொகூர் மாநில அரசாங்கம் வலுவாக இருந்த நிலையில் அவர் சிறந்த தலைமைத்துவ பண்பினை வெளிப்படுத்தினார் என்று தேசிய முன்னணி தலைவருமான ஸாஹித் இவ்வாறு தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2026, 2:44 pm
தாய்லாந்து குண்டுவெடிப்பு சம்பவம்: மலேசியப் பயணிகள் இலக்கு அல்ல
July 2, 2026, 1:21 pm
அலி கமெனியின் இறுதிச் சடங்கில் நாட்டின் பிரதிநிதியாக முஹம்மது சாபு பங்கேற்பார்: பிரதமர்
July 2, 2026, 1:06 pm
உலக கிண்ணம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 32 சீன நாட்டவர்கள் கைது: காவல்துறை நடவடிக்கை
July 2, 2026, 12:59 pm
