செய்திகள் மலேசியா
6ஆவது தேசிய பொருளாதார மாநாடு; வர்த்தகத்தில் உள்ள சவால்களும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
கோலாலம்பூர்:
வர்த்தகத்தில் உள்ள சவால்களும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
மலேசிய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் இதனை கூறினார்.
6ஆவது தேசிய பொருளாதார மாநாடு தலைநகரில் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் 630க்கும் மேற்பட்ட பேராளர்கல் கலந்து கொண்டுள்ளனர். 5 வர்த்தக சபைகளில் இருந்து இவர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
பொருளாதாரத் துறை துணையமைச்சர் லியூ சின் தோங் இம்மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மத்திய கிழக்கில் நடக்கும் போர் உலக பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை தந்துள்ளது.
குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதி தொழில் துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.
இந்தவொரு சூழ்நிலையில் இதுபோன்ற மாநாடுகள் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
வர்த்தகத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்கின்றனர்.
இக்கோரிக்கைகள் அனைத்தும் பிரதமர் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
அதே வேளையில் அரசாங்கம் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது இந்த வர்த்தகர்களின் கோரிக்கைகளும் பரிசீலனைக்கு முன்வைக்கப்படும்.
அவ்வகையில் வர்த்தகர்களின் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் இம்மாநாடு முக்கிய பங்கை ஆற்றும்.
ஆக வரும் காலங்களில் இதுபோன்ற மாநாடுகள் பரவலாக நடத்தப்படும் என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2026, 3:16 pm
ஓன் ஹாஃபிஸ் மந்திரி பெசாரானதால் ஜொகூர் மாநிலம் இன்னும் மேம்பட்டது: ஸாஹித் ஹமிடி கருத்து
July 2, 2026, 1:21 pm
அலி கமெனியின் இறுதிச் சடங்கில் நாட்டின் பிரதிநிதியாக முஹம்மது சாபு பங்கேற்பார்: பிரதமர்
July 2, 2026, 1:06 pm
உலக கிண்ணம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 32 சீன நாட்டவர்கள் கைது: காவல்துறை நடவடிக்கை
July 2, 2026, 12:59 pm
செராஸ் பெருங்கடை வாகன நிறுத்துமிடத்தில் வன்முறை மோதல்: 12 பேர் கைது
July 2, 2026, 11:47 am
