நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார்; ஐந்து சீன நாட்டினர் காயம் - மாச்சாங்கில் பரபரப்பு 

கோத்தா பாரு- 

கோத்தா பாரு-கோலா கிராய் சாலையின் 41-வது கிலோமீட்டரில் உள்ள கட்டுமானத் தளத்தில், அவர்கள் பயணித்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து சீன நாட்டினர் காயமடைந்தனர்.

மச்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசுஹார் முகமது நூர் கூறுகையில், நேற்று நள்ளிரவு சுமார் 12.01 மணியளவில் இந்த விபத்து குறித்து பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது என்றார்.

தொடக்கக்கட்ட விசாரணையின்படி, இந்த விபத்து நேற்று இரவு 11.50 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 66 வயதுடைய சீன நாட்டு நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற டொயோட்டா பிரியஸ் (Toyota Prius) ரக காரில், அதே நாட்டைச் சேர்ந்த மேலும் நான்கு பயணிகள் பயணித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரும் மச்சாங்கில் உள்ள தெமங்கானில் இருந்து பாசிர் பூத்தேவில் உள்ள தோக் பாலி நோக்கி நேவிகேஷன் மேப் (வழிசெலுத்தல் வரைபடம்) செயலியைப் பயன்படுத்திப் பயணித்துக் கொண்டிருந்ததாக அசுஹார் தெரிவித்தார்.

அப்போது, அந்த கார் இன்னும் கட்டுமானத்தில் இருக்கும் மற்றும் பொதுமக்களுக்கு திறக்கப்படாத ஒரு மதகு  திட்டப் பகுதிக்குள் நுழைந்து, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாக நம்பப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கிய 40 முதல் 66 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஆகிய ஐந்து பேரும் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக மச்சாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த விபத்து குறித்து 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 43(1)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset