நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

13.8 பில்லியன் ஒதுக்கீடு: நாடு முழுவதும் 1,250 சேதமடைந்த பள்ளிகள் புதுப்பிக்கப்படுகின்றன

புத்ராஜெயா: 

முழுவதும் சேதமடைந்த, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை மறுகட்டமைக்கும் வகையில், மொத்தம் 1,250 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 13.8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

கல்வி அமைச்சு (KPM) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் வரை 813 திட்டங்கள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. மேலும் 173 திட்டங்கள் கட்டுமானப் பணியில் உள்ளன. 264 திட்டங்கள் கட்டுமானத்திற்கு முந்தைய (Pre-construction) கட்டத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சேதமடைந்த பள்ளிகளின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கல்வி அமைச்சு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஒவ்வொரு திட்டத்தின் பணித்திட்டம், தளத் தயாரிப்பு பணிகளைப் பொறுத்து கட்டுமான காலம் 6 முதல் 36 மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும் அமைச்சு விளக்கியுள்ளது.

இதனால், ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகும் சேதமடைந்த பள்ளிகளின் எண்ணிக்கை நிலையானதல்ல; புதிய மதிப்பீடுகள், கட்டுமான முன்னேற்றங்களைப் பொறுத்து அவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில கல்வித் துறைகள் (JPN) மூலம் சேதமடைந்த பள்ளிகளின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பான, தரமான, சிறந்த கல்விச் சூழலை உறுதி செய்வதில் கல்வி அமைச்சு உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக், நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில், நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கட்டமைப்பு ரீதியாக பாதுகாப்பற்றதாகவும், சேதமடைந்த பள்ளிகளாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி சமூகத்தினரின் நலனை முன்னிறுத்தி, பாதுகாப்பான, வசதியான கல்வி உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset