நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்கூடாயில் வேலை வாய்ப்புகள், சம்பளம், சிங்கப்பூரைச் சார்ந்திருத்தல் ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன: கார்த்தியானி

இஸ்கண்டார் புத்ரி:

ஜொகூரின் இளைஞர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் வேலை செய்வதற்கே அதிகம் விரும்புகின்றனர்.

ஆனால் சிங்கப்பூருடனான சம்பள இடைவெளி காரணமாக, பலர் குடியரசில் வேலை செய்யத் தேர்ந்தெடுக்கின்றனர் என்று நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் கார்த்தியானி ஜெயபாலன் கூறினார்.

இளைஞர்களின் கவலைகள் தீர்க்கப்படாவிட்டால், உள்ளூர் திறமையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வது ஜொகூருக்குக் கடினமாக இருக்கும் என்று ஜொகூர் ஜசெக  மகளிர் பிரிவு துணைத் தலைவருமான அவர் கவலையுடன் கூறினார்.

ஸ்கூடாய் தொகுதியில் நான்கு முனைப் போட்டியை எதிர்கொண்டுள்ள கார்த்தியானி,

வேலை வாய்ப்பு, சம்பளம் சிங்கப்பூர் பொருளாதாரத்தை சார்ந்திருப்பது ஆகியவை வாக்காளர்களால், குறிப்பாக இளம் தலைமுறையினரால் எழுப்பப்பட்ட முக்கியப் பிரச்சினைகளில் அடங்கும்.

இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் உரிய தீர்வை  காண் வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset