செய்திகள் மலேசியா
சிலாங்கூரில் ஃப்ளெக்ஸி பார்க்கிங் செயலி ஹேக் செய்யப்பட்டுள்ளது
ஷா ஆலம்:
நாடு முழுவதும் உள்ள 64 மாநகராட்சி அமைப்புகளால் பயன்படுத்தப்படும் ஃப்ளெக்ஸி பார்க்கிங் அமைப்பு இணையவழித் தாக்குதலுக்கு உள்ளானதை சிலாங்கூர் அரசு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகன நிறுத்துமிட அபராத அறிவிப்புகளை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு அனைத்து மாநகராட்சி மன்றங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
நேற்று முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்த இடையூறு, சிலாங்கூருக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல என்று சிலாங்கூர் உள்ளாட்சி மற்றும் சுற்றுலா குழுவின் தலைவர் Datuk Ng Suee Lim வலியுறுத்தினார்.
“நேற்றும் இன்றும் ஃப்ளெக்ஸி கண்காணிப்பு செயலி ஹேக் செய்யப்பட்டது. நாங்கள் இப்போது அந்த அமைப்பைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த இரண்டு நாட்களுக்கு, பொதுமக்கள் வாகன நிறுத்துமிடக் கட்டணம் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும்,” என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 12:03 am
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
July 4, 2026, 5:46 pm
