செய்திகள் மலேசியா
தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு பின்வாசல் நியமனங்கள் இல்லை: ஓன் ஹபிஸ்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களை, பின்வாசல் முறையில் மாநில அரசாங்கத்தில் தலைவர்களாக நியமிக்காது.
மக்கள் வேட்பாளர்களை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், தேசிய முன்னணி அதை ஏற்கும் என்று அதன் தலைவர் ஓன் ஹபிஸ் காசி கூறினார்.
சில பொறுப்பற்ற கட்சிகள் கூறுவது போல், தோல்வியடைந்த வேட்பாளர்களை மாநில அரசாங்கத்தில் தலைவர்களாக நியமித்து பின்வாசல் நியமனங்கள் எதுவும் இருக்காது என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
மக்கள் இதை ஏற்கவில்லை என்றால், பிஎன் மக்களின் குரலை ஏற்கும் என்று அவர் கூறினார்.
தோற்ற வேட்பாளர் ஜனநாயக வழிமுறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படாததால், அவர் மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது.
தேசிய முன்னணி மீதான வாக்காளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க இந்த நிலைப்பாடு முக்கியமானது என்றும் ஓன் ஹபிஸ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 12:03 am
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
July 4, 2026, 5:46 pm
