நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகடிவதை வழக்கு காரணமாக 4 எம்ஆர்எஸ்எம் மாணவர்கள் நீக்கப்பட்டனர்: அஷ்ராப்

கோலாலம்பூர்:

ஜொகூரில் பகடிவதை வழக்கில் ஈடுபட்ட ஆறு எம்ஆர்எஸ்எம் மாணவர்களில் நால்வர் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மாரா தலைவர் அஷ்ராப் வாஜ்தி துசுகி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை அவர்கள் உடல்ரீதியாகத் தொட்டனரா என்பது குறித்து விசாரித்து வரும் போலிசாரிடம் இருந்து உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரை, சம்பந்தப்பட்ட மற்ற இரண்டு மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கூடிய எம்ஆர்எஸ்எம் கல்லூரி ஒழுங்குமுறைக் குழு இந்தத் தண்டனையை முடிவு செய்ததாக அஷ்ராப் வாஜ்தி கூறினார்.

கூட்டத்தில் பகடிவதை குற்றச்சாட்டின் பேரில் ஆறு மாணவர்களைப் பள்ளியிலிருந்து நீக்க முடிவு செய்த பிறகு, அவர்களின் பெற்றோர்கள் அவர்களை அழைத்துச் சென்றபோது நான் எப்படி உணர்ந்தேன் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

இருப்பினும், மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

தொட்டால் உனக்கு வெளியேற்றம் என்பதை யாரும் மறக்கக் கூடாது என்று அவர் ஒரு முகநூல் பதிவின் மூலம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset