செய்திகள் மலேசியா
கட்சி பேதமின்றி மலாய் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: மலாய் வாக்காளர்களுக்கு துன் மகாதீர் வலியுறுத்து
கோலாலம்பூர்:
தேர்தல்களில் கட்சி பேதமின்றி மலாய் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்:.
மலாய் வாக்காளர்களுக்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
வரவிருக்கும் பொதுத் தேர்தலில், எந்த அரசியல் கட்சி அல்லது அரசு சாரா அமைப்பைச் சார்ந்திருந்தாலும், மலாய் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தேர்தலில் மலாய் வாக்காளர்களின் தேர்வு, நாட்டின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நாடு மலாயாவின் பூமியாகத் தொடர வேண்டுமென்றால், எந்தக் கட்சி அல்லது அரசு சாரா அமைப்பின் பிரிவுக்கும் விசுவாசம் கொள்ளாமல் மலாய் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.
மலாய் வேட்பாளர் யார்? அது பொதுத் தேர்தலின் போது தெரியவரும், என்று அவர் 'த்ரெட்ஸ்' தளத்தில் எழுதிய ஒரு திறந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது குழுவிற்கோ மலாய் மக்களின் விசுவாசம் அளிக்கப்பட்டால், அவர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 12:03 am
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
July 4, 2026, 5:46 pm
