செய்திகள் மலேசியா
எம்ஏசிசி அதிகாரிகள் இன்றிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும்: அப்துல் ஹலிம்
புத்ராஜெயா:
எம்ஏசிசி அதிகாரிகள் இன்றிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் இதனை கூறினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஒவ்வொரு அதிகாரியும் இன்று முதல் சொத்து அறிவிப்பை நிறைவு செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் இரகசியத்தன்மை சுற்றறிக்கை, எம்ஏசிசி சொத்து அறிவிப்பு சுற்றறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படும்.
சொத்து அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வரும்.
ஆனால் இந்த அறிவுறுத்தல்களை நிறைவு செய்வதற்கு ஒவ்வொரு அதிகாரியும் ஒரு மாத கால அவகாசம் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த மே 13 அன்று ஆணையத்தின் பொறுப்பை ஏற்ற பிறகு, பிரிவுத் தலைவர்களுடன் நடைபெற்ற அதிகாரப்பூர்வ கூட்டமான, எம்ஏசிசி தலைமையகத்தில் நடந்த இயக்குநர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபோது இந்த விஷயம் முடிவு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 12:03 am
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
July 4, 2026, 5:46 pm
