நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி முறை சீர்திருத்தத்தை தேசிய கல்வி மன்றம் முன்னெடுக்கும்: பிரதமர்

புத்ராஜெயா:

நாட்டில் கல்வி முறை சீர்திருத்தத்தை தேசிய கல்வி மன்றம் தொடர்ந்து முன்னெடுக்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப தேசிய கல்வி முறையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, உள்ளடக்கம், பாடத்திட்டத்தில் மேம்பாடுகள் உள்ளிட்டவற்றின் மூலம் விரிவான சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்காக தேசிய கல்வி மன்றம் நிறுவப்பட்டது.

மடானி மலேசியாவின் மையமாக விளங்கும் விழுமியங்கள், கலாச்சாரம், தேசிய மொழி, ஒழுக்கநெறிகளைப் புறக்கணிக்காமல், இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தில் தேர்ச்சியை வலுப்படுத்துவதிலும் இந்த மன்றம் ஒரு பங்காற்றுகிறது.

பள்ளிக் கல்வி, உயர்கல்வியை உள்ளடக்கிய தேசியக் கல்வியின் திசையை ஆய்வு செய்த 2026ஆம் ஆண்டின் முதல் தேசியக் கல்வி மன்றம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அன்வார் இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset