செய்திகள் மலேசியா
மாநிலங்களின் கூடுதல் நிதி கோரிக்கைகளில் மத்திய அரசு சிக்கிக்கொள்ளக் கூடாது: பிரதமர்
கோலாலம்பூர்:
மாநில அரசுகளால் எழுப்பப்படும் கூடுதல் நிதித் தேவைகளைத் தானாகவே ஈடுசெய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இல்லை.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
மாநில அரசுகளால் இறுதி செய்யப்படும் முடிவுகளால் ஏற்படும் கூடுதல் நிதியுதவியால் மத்திய அரசு சிக்கிக்கொள்வதைத் தடுப்பதற்காகவே இது அமைந்துள்ளது.
ஒரு மாற்ற அறிவிப்பு இருந்தால், அது கூடுதல் நிதியை உள்ளடக்கியது என்றால் மறுபேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
முதலில் ஒப்பந்ததாரரின் பங்கு குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.
மேலும் இந்த விஷயத்தில் கெடாவில் உள்ள பெலுபாங் நீர் சுத்திகரிப்பு நிலையத் திட்டம் ஒப்பந்ததாரருடன் ஒரு சிக்கல் உள்ளது.
அடுத்து நிதியில் அதிகரிப்பு ஏற்பட்டால், அதில் மத்திய அரசும் ஈடுபடும்.
மாநில அரசின் முடிவுக்கு நாம் கட்டுப்பட்டு இருக்க முடியாது. ஒரு சிக்கல் ஏற்படும்போது, நாம் தானாகவே மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற வேண்டும் என்று அவர் இன்று மக்களவையில் நடைபெற்ற அமைச்சரின் கேள்வி நேர அமர்வின்போது கூறினார்.
கெடாவில் உள்ள முக்கிய திட்டங்களின் கட்டுமானத்தில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, கூடுதல் நிதி ஒதுக்கீடுகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதா என்பது குறித்து பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் ஹாஷிம் எழுப்பிய துணைக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
