செய்திகள் மலேசியா
பேசும்போது அதிக ஒழுக்கத்துடன் இருக்குமாறு பெர்சாமா வேட்பாளர்களை ரபிசி கேட்டுக் கொண்டார்
ஜொகூர்பாரு:
பன்றி வளர்ப்பு குறித்த பெர்லிங் வேட்பாளர் பூ வெய் ஹானின் சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, பொது இடங்களில் பேசும்போது அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்.
பெர்சமா மலேசியக் கட்சியின் தலைவர் ரபிசி ரம்லி, கட்சியின் வேட்பாளர்களை இதனை கேட்டுக்கொண்டுள்ளார்.
பெர்சமா வேட்பாளர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருப்பதாகவும், அவர்கள் பிரச்சினைகளை முழுமையான சூழலுடன் முன்வைக்க வேண்டும்.
இன்று காலை, வேட்பாளர்கள், பேச்சாளர்கள் எப்படிப் பேச வேண்டும், எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது.
நாம் தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன என்பது குறித்து ஒரு நீண்ட வழிகாட்டியை எழுதினேன் என்று அவர் நேற்று இரவு ஒரு உரையாடலில் கூறினார்.
அதே தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் அவர் வேட்பாளர்களுக்கு நினைவூட்டினார்.
மேலும் அவர்களின் தவறுகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருப்பதால் சோர்வடைந்துவிட்டேன் என்று நகைச்சுவையாகக் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, தமன் பெலாங்கியில் நடந்த ஒரு உரையாடலின் போது, பன்றி வளர்ப்பு மீதான கட்டுப்பாடுகளை பூ கேள்விக்குள்ளாக்கினார்.
இந்தத் தொழில் பல ஆண்டுகளுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் இருந்து வருகிறது என்று அவர் வாதிட்டார்.
குறைவான வழிகாட்டுதலுடன் கூட, விரைவாகத் தங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் திறனை வெளிப்படுத்தியதால், நேற்று இரவு பெர்சாமா வேட்பாளர்கள் ஆற்றிய உரைகள் தனக்குத் திருப்தியளிப்பதாக ரபிசி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
