செய்திகள் மலேசியா
'Bakat madani' மூலம் முதல் ஆண்டிலேயே 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு: பிரதமர் அன்வார்
சிரம்பான்:
மத்திய அரசின் புதிய 'Bakat Madani' திட்டம், முதல் ஆண்டிலேயே 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அரசு தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் (GLIC), அரசு இணைப்பு நிறுவனங்கள் (GLC), பெட்ரோனாஸ் (Petronas) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை உயர்த்துவதோடு, நாட்டின் முக்கிய பொருளாதாரத் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
உலகில் மிகச் சில நாடுகளுக்கே இத்தகைய வாய்ப்புகளை வழங்கும் திறன் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், அரசியல் நிலைத்தன்மை, தேசிய ஒற்றுமை. திறமையான நிர்வாக அமைப்பு ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கும் அடித்தளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் இளைஞர்களுக்கு மட்டுமன்றி, B40 குடும்பங்கள், அஸ்னாஃப் பிரிவினர், சமூக ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் உள்ளிட்டோருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், இத்திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்குச் சிறப்பு வரிச் சலுகை அறிவிக்கப்படவுள்ளதாகவும், தொழில்நுட்ப, தொழிற்கல்வி பயிற்சி (TVET) பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படுவதுடன், பயிற்சியாளர்களுக்கான குறைந்தபட்ச உதவித்தொகையும் உயர்த்தப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
'Bakat Madani' திட்டம், தொழில்துறை, கல்வித் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, எதிர்கால பொருளாதாரத்திற்குத் தேவையான திறமையான மனிதவளத்தை உருவாக்கும் முக்கிய தேசிய முயற்சியாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
