செய்திகள் மலேசியா
மனிதர்கள் கடினமாக முயற்சிக்கலாம், ஆனால் எது எப்படி அமைய வேண்டும் என்று இறைவன்தான் தீர்மானிக்கிறான்: சைட் சாடிக்
புத்ராஜெயா:
மனிதர்கள் கடினமாக முயற்சிக்கலாம், ஆனால் வல்ல இறைவன்தான் எது எப்படி அமைய வேண்டும் என அனைத்தையும் தீர்மானிக்கிறான் என்று சைட் சாடிக் கூறினார்.
அர்மாடா நிதியைப் பயன்படுத்தி நம்பிக்கை மோசடி, சொத்து முறைகேடு, பணமோசடி ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பு செய்த இறுதி மேல்முறையீட்டைப் பின் தொடர்வதற்காக, மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் இன்று காலை 8.50 மணிக்கு இங்குள்ள நீதிமன்றம் வந்தடைந்தார்.
கருப்பு நிற கோட் அணிந்திருந்த 33 வயதான சாடிக், ஊடகவியலாளர்களால் அணுகப்பட்டபோது அமைதியாகக் காணப்பட்டார்.
அப்போது மனிதர்கள் முயற்சி செய்யலாம், இறைவன்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான் என்று அவர் ஒரு புன்னகையுடன் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
முன்னதாக அவரின் பெற்றோர் சைட் அப்துல் ரஹ்மான் சைட், ஷரிஃபா மஹானி சைட் அப்துல் அஜீஸ் ஆகியோர் காலை 7 மணியளவில் முன்னதாகவே வந்தடைந்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையில், அவரது வருங்கால மனைவியான பெல்லா குடும்ப உறுப்பினர்களுடன் காலை 7.55 மணிக்கு நீதிமன்றம் வந்தடைந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
