செய்திகள் மலேசியா
வைரலாகும் மருத்துவமனைச் சூழல்: ராணி எலிசபெத் மருத்துவமனையின் வசதிகள் சேவைகள் மேம்படுத்தப்படும்
கோத்தா கினபாலு:
ராணி எலிசபெத் மருத்துவமனையின் வசதிகள் சேவைகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
சபா மாநில சுகாதாரத் துறை இதனை உறுதியளித்துள்ளது.
நோயாளிகள், உறவினர்கள் பொதுமக்களின் வசதி எப்போதும் பேணப்படுவதை உறுதி செய்வதற்காக, ராணி எலிசபெத் மருத்துவமனையில் உள்ள வசதிகள், சேவை வழங்குதலைத் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
இரவு நேரங்களில் மருத்துவமனையின் சூழல் குறித்த பிரச்சினைகளை எழுப்பிய சமூக ஊடகப் பதிவுகளுக்குக் கிடைத்த பின்னூட்டங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் அவசர, விபத்து சிகிச்சைத் துறையில் காத்திருக்கும் நேரங்கள், வரவேற்புப் பகுதியில் பொதுமக்கள் ஓய்வெடுப்பது, சிற்றுண்டிச்சாலை செயல்பாடுகள், வாகன நிறுத்துமிட வசதிகள் ஆகியவை அடங்கும்.
இரவு நேரங்களில் வரவேற்புப் பகுதி, பொது நடைபாதைகள், காத்திருப்புப் பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என அத்துறை கூறியது.
முன்னதாக ராணி எலிசபெத் மருத்துவமனையின் சூழல் குறித்த காணொளி பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலானது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
