நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தல்: 7 புகார்கள் கிடைத்துடன் போலிசார் 3 விசாரணை ஆவணங்கள் திறந்துள்ளனர்

ஜொகூர்பாரு:

கடந்த சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் நாள் முதல் நேற்று இரவு 11.59 மணி வரை, 16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தல் தொடர்பாக ஏழு புகார்களை போலிஸ் பெற்றுள்ளது.

மொத்த புகார்களில், பல்வேறு குற்றங்கள் தொடர்பான மூன்று விசாரணை ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் போலிஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாத் தெரிவித்தார்.

தீ அல்லது வெடிபொருட்களைப் பயன்படுத்தி சேதம் விளைவித்ததற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 435-இன் கீழ் ஒரு விசாரணை ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு சேதம் விளைவித்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கூடுதலாக, தூண்டிவிடும் தன்மை கொண்ட செயல்கள் அல்லது அச்செயல்களுக்கான முயற்சிகள், இணைய வசதிகள் அல்லது சேவைகளை முறையற்ற முறையில் பயன்படுத்துதல் தொடர்பாக கீழ் மற்றொரு விசாரணை ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset