செய்திகள் மலேசியா
மூடா நிதி ஊழல் வழக்கில் விடுதலையா? அல்லது சிறையா?: சைட் சாடிக்கின் நிலை நாளை தெரியவரும்
புத்ராஜெயா:
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக், மூடா கட்சி நிதிகள் சம்பந்தப்பட்ட, குற்றவியல் நம்பிக்கை மோசடிக்கு உடந்தையாக இருந்தது, சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துதல், பணமோசடி ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில், அவர் விடுதலையா அல்லது சிறைத் தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்படுவாரா என்பது நாளை தெரியவரும்.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் டத்தோஶ்ரீ அபு பக்கர் ஜெய்ஸ், நீதிபதி டத்தோ சே முகமது ருசிமா கசாலி, டத்தோ கோலின் லோரன்ஸ் செக்குவேரா ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய கூட்டரசு நீதிமன்ற அமர்வு, சைட் சாடிக் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான அரசுத் தரப்பின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பை நாளை காலை 9 மணிக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் 12 அன்று அரசுத் தரப்பின் இறுதி மேல்முறையீட்டின் போது, இரு தரப்பினரும் தங்கள் வாதங்களை முடித்த பின்னர், ஒரு அரிதான சூழ்நிலையாக, நீதிபதி அபு பக்கர் அந்த மேல்முறையீட்டை மறுபரிசீலனை செய்ய அரசுத் தரப்புக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:51 pm
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
July 10, 2026, 4:19 pm
16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தல் அன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மழை, இடி முழக்கம் ஏற்படும்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
