செய்திகள் மலேசியா
கூடுதல் மானிய டீசல் ஒதுக்கீட்டிற்காக பூடி மடானி திட்டத்திற்கு 18,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது: அமீர் ஹம்சா
கோலாலம்பூர்:
கூடுதல் மானிய டீசல் ஒதுக்கீட்டிற்காக பூடி மடானி திட்டத்திற்கு 18,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் இதனை தெரிவித்தார்.
நேற்று இரவு நிலவரப்படி, தகுதியுள்ள டீசல் பிக்கப் ஜீப் வாகன உரிமையாளர்களிடமிருந்து, மாதத்திற்கு கூடுதலாக 100 லிட்டர் மானிய டீசல் ஒதுக்கீட்டிற்காக, அதிகாரப்பூர்வ பூடி மடானி இணையதளம் 18,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
நேற்று இரண்டாம் நாளாகத் தொடங்கிய பூடி டீசல் திட்டத்தின் ஆரம்பகட்ட அமலாக்கம், எந்தவித தொழில்நுட்பப் பிரச்சனைகளும் இன்றி சுமுகமாக நடைபெற்றது.
நேற்று இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து, இதன் மூலம் பயனடைந்த மக்கள் சம்பந்தப்பட்ட 40,000க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு, டாமன்சாரா செல்லும் வழியில் உள்ள பெட்ரோனாஸ் நிலையத்தில் பூடி டீசல் திட்டத்தின் ஆரம்பகட்ட அமலாக்கத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:51 pm
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
July 10, 2026, 4:19 pm
16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தல் அன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மழை, இடி முழக்கம் ஏற்படும்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
