நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிரட்டல், பகடிவதையில் தொடர்புடைய 6 மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டனர்: போலிஸ்

ஜொகூர்பாரு:

மிரட்டல், பகடிவதையில் தொடர்புடைய 6 மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டனர்.

ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாத் இதனை கூறினார்.

மூவாரில் உள்ள ஒரு எம்ஆர்எஸ்எம் பள்ளியில் 14 வயது மாணவரை மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் தொடர்புடைய ஆறு மாணவர்களை போலிஸ் இன்று கைது செய்தது.

முவார் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 

இன்று அதிகாலை 1.30 மணி முதல் 2.12 மணிக்குள் மூவார், மலாக்காவின் அலோர் காஜா பகுதிகளில் அவர்களைக் கைது செய்தனர்.

அதற்கு முன்பாக, நேற்று மாலை 5 மணிக்கு இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமக்கு ஒரு போலிசாருக்கு புகார் கிடைத்ததாக அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் மார்பில் தாக்கப்பட்டு, பள்ளியில் மூத்த மாணவரான சந்தேக நபரிடம் பணத்தைக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.

தலையில் தாக்கப்பட்டதால் தனது கண்களில் காயங்கள் ஏற்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். 

இந்தச் சம்பவத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் மன உளைச்சலுக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளானார்.

இது அவரைப் பள்ளியிலிருந்து விலக முடிவு செய்ய வைத்தது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset