செய்திகள் மலேசியா
எம்ஆர்எஸ்எம் மாணவர்கள் பகடிவதையில் ஈடுபட்ட விவகாரம்; விசாரணைக்கு 24 மணி நேரம் அவகாசம்: அஷ்ராப் வஜ்டி
கோலாலம்பூர்:
எம்ஆர்எஸ்எம் மாணவர்கள் பகடிவதையில் ஈடுபட்ட விவகாரத்திற்கு விசாரணைக்கு 24 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராப் வஜ்டி டுசுகி இதனை கூறினார்.
ஜொகூரில் உள்ள ஒரு எம்ஆர்எஸ்எம் கல்லூரியில் நடந்த பகடிவதை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு ஐந்தாம் படிவ மாணவர்களை விசாரித்து நீக்குவதற்காக மாரா, எம்ஆர்எஸ்எம் நிர்வாகிகளுக்கு, 24 மணி நேரத்திற்குள் கல்லூரி ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கூட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொட்டால், வெளியேறு என்ற கொள்கையை எந்தவித சமரசமுமின்றி அமல்படுத்தும் வகையில், உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மூத்த மாணவர்கள் குழு ஒன்று இளைய மாணவர்களைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து அவர் தனது ஆழ்ந்த வருத்தத்தையும், துக்கத்தையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார்.
காரணம் எதுவாக இருந்தாலும், இளைய மாணவர்களை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்துத் துன்புறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளவோ சமரசம் செய்துகொள்ளவோ முடியாத ஒரு செயலாகும்.
இந்த எச்சரிக்கையை நான் அனைத்து மாணவர்களுக்கும் பலமுறை விடுத்துள்ளேன்.
கொடுமைப்படுத்துதல் ஏதேனும் இருந்தால், எம்ஆர்எஸ்எம்-இல் உங்களுக்கு இடமில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2026, 10:19 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல்; நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆணை அளிக்க வேண்டும்: பிரதமர்
June 28, 2026, 10:17 pm
புத்ராஜயாவில் நண்பர்கள், ஜொகூரில் நாங்கள் எதிரிகள்: ஜாஹித் ஹமிடி
June 28, 2026, 4:18 pm
எல்ஆர்டி 3; நாளை முதல் ஒரு மாதத்திற்கு இலவச சேவை: பிரதமர்
June 28, 2026, 12:30 pm
லயாங்-லயாங் தொகுதியில் உதயமானது புதிய விடியல்: மாற்றத்தை நோக்கி முழக்கமிடும் குணா பாலகிருஷ்ணன்
June 28, 2026, 12:29 pm
