நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் 35 லட்சம் ரிங்கிட் செலவில் இணைக்கட்டம்: அடிக்கல் நாட்டு விழா சிறப்புடன் நடைபெற்றது

தம்புன்:

பல ஆண்டுக் கிளேபாங் தமிழ்பள்ளிக்கு இணைக்கட்டம் தேவை குறித்து மேற்கொண்ட கனவு நனவாகியது.


தம்பூன் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிளேபாங் தமிழ்ப்பள்ளியின் புதிய மூன்று மாடி பள்ளிக் கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில்,

அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது என்று பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் கிருஷ்ணசாமி முத்துசாமி கூறினார்.

பேரா மாநிலத்தில் அதிக மாணவர்கள கொண்டப பள்ளியாக விளங்கி வரும் இப்பள்ளியில் ஏற்கனவே மூன்று மாடிக்கொண்ட கட்டடம் உள்ளது.

கடந்த 2005–2006ஆம் ஆண்டுகளில் தோட்டப் பகுதியில் இயங்கி வந்த பள்ளி, 2015ஆம் ஆண்டு தற்போதுள்ள பிரதான சாலையோரத்தில் மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.

தற்போது கட்டப்படவுள்ள மூன்று மாடிக் கட்டடம், பள்ளியின் நான்காவது இணைக் கட்டடமாகும். இதில் 12 புதிய வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளன.

இந்தக் கட்டடத் திட்டம் 2019ஆம் ஆண்டு அப்போதைய கல்வி துணையமைச்சர் தியோ நீ சிங் பதவிக்காலத்தில் முன்மொழியப்பட்டதாகவும், பின்னர் அரசியல் மாற்றங்களும் கோவிட்-19 பெருந்தொற்றும் காரணமாகத் திட்டம் தாமதமடைந்ததாகவும் அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய பிரதமரின் அலுவலகத்தின் மூலம், நாடாளுமன்ற சிறப்பு அதிகாரி டத்தோ சுரேஷ்குமார் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முக்கிய பங்காற்றியதாக அவர் பாராட்டினார்.

பிரதமர் இந்தியத் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கிய நிதித் திட்டத்தின் கீழ், கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கும் 35 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்பக் கட்டுமானப் பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பத்மினியின் பங்களிப்பை அவர் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

இந்த நிகழ்வில கலந்து கொண்ட தம்புன் நாடாளுமன்றத் தொகுதிற்கான சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஸ் குமார் அடுத்த வாரம் கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள கூட்டத்தில் பேசினார்.

நீண்டகாலமாக இணைக்கட்டத்திற்கு பள்ளி நிர்வாகம், பெற்றோர் மற்றும் சமூகத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்தத் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த கட்டடம் பள்ளியின் அவசியமான தேவையாகக் கருதப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கு ஆரம்பத்தில் நம்பிக்கை கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும், பின்னர் ஆட்சி மாற்றங்களால் திட்டம் தாமதமானது.

தற்போது மடானி அரசாங்கத்தின் நடவடிக்கையால் மீண்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, சுமார் 35 லட்சம் ரிங்கிட் அதிகமான செலவில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.


இந்த கட்டடமர மூன்று மாடிகளுடன் 12 வகுப்பறைகள் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் நிறைவேறுவதற்கு பிரதமரும்  தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார்வழங்கிய ஆதரவுக்கு நன்றிகள் என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset