செய்திகள் மலேசியா
எல்ஆர்டி 3; நாளை முதல் ஒரு மாதத்திற்கு இலவச சேவை: பிரதமர்
கிள்ளான்:
ஷாஆலம் எல்ஆர்டி 3இன் சேவைகளை மக்கள் நாளை முதல் ஒரு மாதத்திற்கு இலவசமாக பெறுவார்கள்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.
பண்டார் உத்தாமாவிலிருந்து ஜோஹான் செத்தியா வரை செல்லும் 37.8 கிலோமீட்டர் நீளமுள்ள எல்ஆர்டி 3 முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு, இயக்கத்திற்குத் தயாராக உள்ளது.
இது இவ்வழித்தடத்தைச் சுற்றியுள்ள இருபது லட்சம் குடியிருப்பாளர்களுக்குப் பயனளிக்கும்.
ஷாஆலம் எல்ஆர்டி 3 சேவையை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் இதனை கூறினார்.
ஷாஆலம் வழித்தடத்தில் பிரசரானா இயக்கும் இடைநிலை பேருந்து சேவைகளுக்கும் இலவசக் கட்டணம் வழங்கப்பட்டது.
நாளை ஜூன் 29 முதல் ஜூலை 31 வரை, ஷாஆலம் வழித்தடம், அதன் வழியே செல்லும் இடைநிலை பேருந்துகளுக்கான கட்டணம் ஒரு மாதத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2026, 10:19 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல்; நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆணை அளிக்க வேண்டும்: பிரதமர்
June 28, 2026, 10:17 pm
புத்ராஜயாவில் நண்பர்கள், ஜொகூரில் நாங்கள் எதிரிகள்: ஜாஹித் ஹமிடி
June 28, 2026, 12:30 pm
லயாங்-லயாங் தொகுதியில் உதயமானது புதிய விடியல்: மாற்றத்தை நோக்கி முழக்கமிடும் குணா பாலகிருஷ்ணன்
June 28, 2026, 12:29 pm
