செய்திகள் மலேசியா
புத்ராஜயாவில் நண்பர்கள், ஜொகூரில் நாங்கள் எதிரிகள்: ஜாஹித் ஹமிடி
ஜொகூர்பாரு:
இந்த முறை ஜொகூர் மாநிலத் தேர்தலில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் உள்ள தனது கூட்டாளிகளுக்கு எதிராகப் போட்டியிட வேண்டியுள்ளது.
இதனால் தேசிய முன்னணி ஒரு தனித்துவமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது.
இருப்பினும் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதில் முழு கட்சி அமைப்பும் முழு கவனம் செலுத்த வேண்டும் துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
ஜொகூர் மாநிலத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் மோதிக்கொண்ட நிலைமை வழக்கமானதிலிருந்து வேறுபட்டது.
ஆனால் அதைத் தொழில்முறையாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
நாம் உண்மையான அரசியல் எதிரிகளுடன் சண்டையிட்டிருந்தால், அது எளிதாக இருந்திருக்கும்.
ஆனால் இது கடினமாக இருக்கிறது. ஏனென்றால் புத்ராஜெயாவில் நாம் நண்பர்கள். இங்கே நாம் சண்டையிடுகிறோம்.
இது மிகவும் கடினம். உண்மையிலேயே என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.
ஆனால், அம்னோவின் கொள்கைகள் மற்றும் மிக முக்கியமாக, தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளின் பெயரால், நாம் நமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்தாக வேண்டும் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2026, 10:19 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல்; நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆணை அளிக்க வேண்டும்: பிரதமர்
June 28, 2026, 4:18 pm
எல்ஆர்டி 3; நாளை முதல் ஒரு மாதத்திற்கு இலவச சேவை: பிரதமர்
June 28, 2026, 12:30 pm
லயாங்-லயாங் தொகுதியில் உதயமானது புதிய விடியல்: மாற்றத்தை நோக்கி முழக்கமிடும் குணா பாலகிருஷ்ணன்
June 28, 2026, 12:29 pm
